CTET 2026 தேர்வு விண்ணப்பம் தொடக்கம்; CBSE பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரம்
சிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் சிடெட் தேர்வு (CTET) அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 பிப்ரவரி மாத தேர்விற்கு நவம்பர் 27 முதல் டிசம்பர் 18 வரை விண்ணப்பம் பெறப்படுகிறது. தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ஆன்லைன் வழியாக https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிபிஎஸ்இ நடத்தும் சிடெட் தேர்வு (CTET) 2026 வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. ஆசிரியர் தகுதிப் பெற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2026
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில், மாநிலங்களில் அளவில் டெட் (TET) தேர்வும், மத்திய அரசு பள்ளிகளுக்கு சிடெட் (CTET) தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

