Fri. Aug 29th, 2025

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி / Dairy farming training by Indian Bank

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி / Dairy farming training by Indian Bank

இந்தியன் வங்கி, சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் இலவச கறவை மாடு வளா்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் வெங்கடேசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, தற்போது 30 நாள்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு கறவை மாடு வளா்ப்பு, பால்பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம், 5-ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ளவா்கள் ஆக. 7-ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

சீருடை, உணவு, பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும். நிறைவில் சான்றிதழும், தோ்ச்சி சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி என்ற முகவரியில் அல்லது 94422 47921, 90806 76557 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *