DCPU ஈரோடு வேலைவாய்ப்பு 2025 | Data Analyst பணியிடம் | BCA தகுதி
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் (District Child Protection Unit – DCPU), டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BCA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை 10 நவம்பர் 2025க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிட விவரங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) | 01 |
கல்வித்தகுதி
- கணினி பயன்பாட்டில் பட்டம் (BCA) பெற்றிருக்க வேண்டும்.
- புள்ளியியல் / கணிதம் / பொருளாதாரம் / கணினி துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கணினி திறனில் நிபுணத்துவம் அவசியம்.
வயது வரம்பு
- அதிகபட்சம்: 42 வயது
- அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரம்
- மாதச்சம்பளம்: ரூ.18,536
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை
- நேர்முகத் தேர்வு / எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளமான erode.nic.in -இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைக்கவும்.
- விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
Erode District – 638011.

