DSWO திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2025 – 13 Case Worker, Counsellor, IT Staff உள்ளிட்ட பணியிடங்கள்
திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO Tiruvannamalai) சார்பில் Case Worker, Center Administrator, Senior Counsellor, IT Staff, Security, மற்றும் Multipurpose Helper உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2025 ஆகும்.
காலியிட விவரம்
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Center Administrator | 01 |
| Senior Counsellor | 01 |
| IT Staff | 01 |
| Case Worker | 06 |
| Security | 02 |
| Multipurpose Helper | 02 |
கல்வித் தகுதி
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் 10th, Diploma, BA, BSW, BCA, B.Sc, Degree, LLB, Graduation, MSW, MBA, MA, MCA, M.Sc, அல்லது Masters Degree போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
| பணியின் பெயர் | கல்வித் தகுதி |
|---|---|
| Center Administrator | Degree, LLB, MSW, MBA, MA, M.Sc |
| Senior Counsellor | MA, MSW, M.Sc, Masters Degree |
| IT Staff | Diploma, Graduation, BCA, B.Sc, MCA, M.Sc |
| Case Worker | BA, BSW, B.Sc, MA, MSW, M.Sc |
| Security | 10th |
| Multipurpose Helper | 10th |
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதுக்கும், அதிகபட்சம் 40 வயதுக்கும் இடையில் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
| பணியின் பெயர் | மாத சம்பளம் |
|---|---|
| Center Administrator | ₹35,000/- |
| Senior Counsellor | ₹22,000/- |
| IT Staff | ₹20,000/- |
| Case Worker | ₹18,000/- |
| Security | ₹12,000/- |
| Multipurpose Helper | ₹10,000/- |
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
தேர்வு செயல்முறை
- எழுத்துத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளம் tiruvannamalai.nic.in சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து சரியாக நிரப்பவும்.
கீழே உள்ள முகவரிக்கு 28.11.2025க்குள் அனுப்பவும்:
முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Second Floor, Collectorate Campus,
Tiruvannamalai – 606604.

