Sat. Dec 13th, 2025

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு; விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு; விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி
திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு; விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு; விடுதி உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பணி

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் கணக்கு அதிகாரி, ஆலோசகர், விடுதி மேனேஜர், கணக்காளர், பொறியியல் பயிற்சியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், விடுதி உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு செயல்படும் விடுதி நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த வகையில், என்னென்ன பதவிகள் வேலைவாய்ப்பு உள்ளன, கல்வித்தகுதி என்ன, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
கணக்கு அதிகாரி1
பொறியாளர்1
விடுதி மேனேஜர்5
கணக்காளர்4
பயிற்சி பொறியியல்3
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்4
விடுதி உதவியாளர் மேனேஜர்27
மேட்ரான்2
பல்நோக்கு பணியாளர்1
மொத்தம்48

தகுதிகள்

  • கணக்கு அதிகாரி பதவிக்கு பி.காம், எம்.காம், ICWA/CA ஆகியவை முடித்திருக்க வேண்டும். கணக்கு துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும். ஓய்வு பெறுபவர்கள் அல்லது ஓய்வு பெற உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 வயதிற்கு அதிகமாஅக 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம்.
  • பொறியாளர் பதவிக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் B. E. / B. Tech முடித்திருக்க வேண்டும்.
  • விடுதி மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம். 5 வருடம் அனுபவம் தேவை.
  • கணக்காளர் பதவிக்கு வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, 5 வருடம் அனுபவம் தேவை.
  • பயிற்சி பொறியியல் பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் B. E / B. Tech /BCA/ MCA / MSc ஆகிய கல்வித்தகுதியுடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.
  • டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்பு உடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.
  • விடுதி உதவியாளர் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் 1 ஆண்டு அனுபவம் தேவை.
  • மேட்ரான் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப் பணி, பொது நிர்வாக ஆகியவற்றில் முதுகலை அல்லது ஏதெனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவம் தேவை.
  • பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, தட்டச்சு, கணினி பயன்பாடு, நல்ல கம்யூகேஷன் திறன், 1 ஆண்டு அனுபவம் ஆகியவை தேவை.

சம்பள விவரம்
கணக்கு அதிகாரி – ரூ.40,000, பொறியாளர் – ரூ.26,790 வழங்கப்படும். இதர பதவிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
திருச்சி என்ஐடி விடுதி நிர்வாகத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்னப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, எழுத்துத்தேர்வு/ நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், பெரும்பாலும் நேர்காணல் அடிப்படையில் அமையும்.

நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சான்றிதழ்கள்

  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • பட்டப்படிப்பு ஒங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
  • பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • வகுப்பு பிரிவு சான்றிதழ்
  • அடையாள அட்டை
  • அனுபவ சான்றிதழ்

விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் இதற்கான உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் வழியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை https://www.nitt.edu/home/other/jobs/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். போன் அல்லது இமெயில் மூலம் தகவல் பகிரப்படும். திருச்சியில் என்ஐடி விடுதி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடக்கம்01.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்13.12.2025
எழுத்துத் தேர்வு/ நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

திருச்சி என்ஐடி விடுதி நிர்வாகத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *