Mon. Sep 15th, 2025

Zoho ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம் / Employment at Zoho IT company.. No experience required.

Zoho ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம் / Employment at Zoho IT company.. No experience required.

ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது எஸ்ஓசி அனலிஸ்ட்(SOC Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 0-6 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு விண்டோஸ், ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

Shell Scripting கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் செக்யூரிட்டி டூல்ஸ் மற்றும் லாக் சர்ச்சிங் குவரி லேங்குவேஜ் மற்றும் மெத்தட்ஸ் (log Searching query languages and methods) தெரிந்திருக்க வேண்டும். காமன் செக்யூரிட்டி விஷயங்களில் தனியாக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஏதாவது ஒரு புராகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும்.

பணி என்பது சைபர் செக்யூரிட்டி பிரிவில் வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. தேர்வாகும் நபர்களுக்கு 24/7 அடிப்படையில் பணி இருக்கும். இதனால் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை Weekdays-ல் கிடைக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யClick Here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *