Mon. Oct 13th, 2025

கோவையில் செப் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் / Employment camp in Coimbatore on September 19th

கோவையில் செப் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் / Employment camp in Coimbatore on September 19th

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற் கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

முகாமிற்கு 10 மற்றும் பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. இதில், பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு பணிநியமன ஆணை உடனே வழங்கப்படும்.

முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவுசெய்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *