Wed. Oct 15th, 2025

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்/ Employment camp in Madurai

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்/ Employment camp in Madurai
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வரவும்.

மதுரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.08.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேயைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் குறிப்பாக சில தனியார் மருத்துவமனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறால்.

டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீசியன், மருந்தாளுநர், வரவேற்பாளர், மருத்துவமனை உதவியாளர் மற்றும் ஹோம் நர்சிங் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர் மேலும் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் https://www.tnprivatejobstn.gov.in என்ற இணையளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறால்.

அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள். குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 22.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும், துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *