Mon. Oct 13th, 2025

பெண்களுக்கு வேலைவாய்ப்பு – சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி / Employment for women – Work at the Community Management Training Center

தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!

பெண்களுக்கு வேலைவாய்ப்பு – சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி / Employment for women – Work at the Community Management Training Center

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) செயல்படுகிறது.

இங்கு சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதார்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி கட்டாயமில்லை. அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பணியின் தன்மைகள்
சமுதாய வளப் பயிற்றுநர் தகவல் தேடுதல், தகவல் சேகரித்தல், புதிய தகவல்கள் சேர்த்தல் மற்றும் தகவல் தொகுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தேடுதல் – பயிற்சிக்கு தேவையான தகவல்களை தேடி சேகரிப்பவராக இருக்க வேண்டும்.
தகவல் சேகரித்தல் – பயிற்சிக்கான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
புதிய தகவல்கள் சேர்த்தல் – காலத்திற்கு ஏற்ப புதிய தகவல்களை சேகரிக்க வேண்டும்.
தகவல் தொகுத்தல் – தேவையான நேரத்தில் தகவல்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.

தகுதிகள்

  • இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு இல்லை.
  • கல்வித்தகுதி கட்டாயமில்லை. நல்ல உடற்தக்தி மற்றும் திறன் இருந்தால் போதுமானது.
  • சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
  • மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10இல் கலந்துகொண்டு இருந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்களுக்கு செல்போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • சுய உதவிக்குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும். குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் தேவை.
  • அரசியலில் பொறுப்புகளில் இருக்கக்கூடாது. தனியார் நிறுவனங்களில் முழு நேரம் அல்லது பகுதி நேரம் பதிவியில் இருக்கக்கூடாது.

ஊதியம்
இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுகு பயிற்சி நடைபெறும் காலத்தில் அதற்கான மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படும். மாத ஊதியம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் உரிமை கோர முடியாது.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள பெண்கள் https://dindigul.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதார்களின் அடிப்படை தகவல்கள், மொழி திறன், கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, புகைப்படம், கல்வித்தகுதி நகல் மற்றும் குழு பரிந்துரை தீர்மானம் இணைத்து அனுப்ப வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம்,
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடக்கபப்ட்ட நாள்10.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்17.09.2025
எழுத்துத் தேர்வு, நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

இப்பணி தொடர்பான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் : 0451 – 2460050 அல்லது உதவி திட்ட அலுவலர் 9944133895 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *