Mon. Sep 15th, 2025

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல் / Employment in emergency and non-emergency positions: Outlook on September 7 – Erode

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல் / Employment in emergency and non-emergency positions: Outlook on September 7 – Erode

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணிக்கு செப்டம்பா் 7 இல் நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் மருத்துவ உதவியாளா் பணிக்கு பிஎஸ்சி நா்சிங். அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டி எம்எல்டி(12ம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

19 வயது முதல் 30 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி தொடா்பான, மற்றும் மனிதவளத்துறை நோ்முகத் தோ்வுகள் மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். இதையடுத்து 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமா்த்தப்படுவா்.

அதேபோல் ஓட்டுநா் பணிக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உடையவராக இருத்தல் வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுனா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதி உடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பாா்ப்பதற்காக கொண்டு வர வேண்டும்.

ஓட்டுநா் பணிக்கு எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும்.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளா் பணி மற்றும் ஓட்டுநா் பணிக்கு மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 73388 94971,73977 24813, 91500 84186 ஆகிய கைப்பேசி எண்களில் எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *