ஐடிஐ சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு – இலவச பயிற்சி, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உறுதி / Extension of deadline for ITI admissions – free training, scholarships, employment guarantee
ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடிச் சேர்க்கை 23.06.2025 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதுஎப்படி?
மாணவர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.
- அத்துடன் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்பட உள்ளது.
- தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், இவை அனைத்தும் வழங்கப்படும்.
- கட்டணமில்லா பேருந்து வசதியும் உண்டு.
வேலைவாய்ப்பு எப்படி?
கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்பட்டால், கீழ்க்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு அலைபேசி எண்: 9499055642
whatsapp எண்: 9499055618
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.