Wed. Mar 25th, 2026

ராணுவ பணியில் சேரும் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு நிதி உதவி / Financial assistance for children of ex-servicemen joining the military

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்களை போலவே தங்கள் மகள் மற்றும் மகனை ராணுவ பணிக்கு அனுப்பியிருந்தாலோ, அல்லது அக்னிவீர் பணியில் சேர்ந்திருந்தாலோ, அவர்களை ஊக்குவிப்பதற்காக தொகுப்பு நிதியிலிருந்து, முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலமாக, ஊக்கத்தொகை பெறலாம்.

அதன்படி, நிரந்தர படைத்துறை அலுவலர் (தேசிய பாதுகாப்பு அகாடமி) ராணுவம், விமானம், கப்பல் சேர்ந்து பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. குறுகிய கால படை அலுவலர் பிரிவில், 50,000 ரூபாய், இளநிலை படை அலுவலர் பிரிவில், 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

நிதியுதவியை பெற முன்னாள் படைவீரராகவும், தமிழகம் பூர்வீகமாக இருத்தல் வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கடந்த, 2015, ஏப்., 1க்கு பிறகு தங்கள் பிள்ளைகளை ராணுவ பணிக்கு அனுப்பி பணிபுரிந்து வந்தாலும், அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்திருந்தலும், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி, உரிய நிதியுதவி பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *