Sat. Jul 26th, 2025

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: மயிலாடுதுறை

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: மயிலாடுதுறை

கலைஞா் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரா்களுக்கென உதவி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: மயிலாடுதுறை

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைஞா் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான விண்ணப்பதாரராக இருந்து, நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரா்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை திட்ட விவரங்கள் அறிய தொலைபேசி எண்கள்: மயிலாடுதுறை

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதாரா்களுக்கென தொலைபேசி எண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 04364-222588, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் 04364-222033, சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகம் 04364-270222, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் 04364-222456, குத்தாலம் வட்டாட்சியா் அலுவலகம் 9943506139, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் 04364-270527, தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகம் 04364-289439 ஆகிய இடங்களில் அலுவலக நாள்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடா்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *