Tue. Oct 14th, 2025

ITI படித்தவர்களுக்கு – ரூ. 14,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி / For ITI graduates – Training with an incentive of Rs. 14,000

ITI படித்தவர்களுக்கு – ரூ. 14,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி / For ITI graduates – Training with an incentive of Rs. 14,000

தற்போது சண்தைக்கேற்ற மாணவர்களை தயார் செய்வது தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வர் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் போன்றவற்றின் மூலம் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், அடுத்த கட்ட படிப்பை மேற்கொள்ளவும், அவர்களுக்கு கூடுதல் திறன் பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகுத்து வருகிறது.

வேலையில்லாத மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உதவுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ITI படித்த மாணவர்களுக்கு, தொழில் பழகுவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாநகர் போக்குவரத்து கழகத்தின் மாதம் ரூ. 14000 உதவித்தொகையுடன் ஒருவர் ITI தொழில் பழகுனர் பயிற்சி எளிதில் பெறலாம்.
அந்த வகையில் மாநகர் போக்குவரத்து கழக தொழில் பயிற்சி பள்ளியில், உதவித்தொகையுடன் பயிற்சி பெற போக்குவரத்து துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக தொழில் பயிற்சி பள்ளியில் நடைபெறும், சிறப்பு முகாமில் செப்டம்பர் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ITI தொழிலில் பழகுநர் பயிற்சி காலம் 1 வருடம். Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto Electrician, Electrician, Fitter and Welder ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *