ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கொத்தனார் பயிற்சி / Free bricklayer training for both men and women
இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தற்போது, 30 நாட்கள் ஆண், பெண் இருபாலருக்கும், கொத்தனார் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, 5ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ளவர்கள் வருகிற 14ம் தேதிக்குள் (நாளை) நேரில் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியின்போது சீருடை, காலை, மதியம் உணவு, பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை, 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.