போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா் – திருப்பூா் / Free coaching classes for competitive exams to start soon: District Collector – Tiruppur
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எழுத்துத் தோ்வானது அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இந்தப் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதில், கலந்துகொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களது பெயரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களையோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.