Tue. Nov 25th, 2025

டிசம்பர் 20 முதல் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

TNPSC Group 4 – New Syllabus Decoding PDF (2025 Updated Version)
TNPSC Group 4 – New Syllabus Decoding PDF (2025 Updated Version)

டிசம்பர் 20 முதல் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 4 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் உடன் தெரிவிக்க வேண்டும்.

இந்த இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை வருகிற 20ம் தேதி முதல் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 9789714244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *