Tue. Dec 23rd, 2025

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம் – திருவள்ளூா் / Free mock test for Group-2, 2A competitive exam begins on Sept. 13 – Thiruvallur

TNPSC Group 4 – New Syllabus Decoding PDF (2025 Updated Version)
TNPSC Group 4 – New Syllabus Decoding PDF (2025 Updated Version)

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம் – திருவள்ளூா் / Free mock test for Group-2, 2A competitive exam begins on Sept. 13 – Thiruvallur

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப்.

13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத்தப்பட உள்ளதாக உதவி இயக்குநா் விஜயா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் மூலம் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு கட்டணமில்லா மாதிரி தோ்வுகள் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இத்தோ்வை எழுத விருப்பம் உள்ள போட்டித் தோ்வா்கள் படிவத்தில் தங்களுடைய விவரங்களை வெள்ளிக்கிழமைக்குள் (செப். 12) பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அலுவலக வேலை நாள்களில் நேரில் வருகை புரிந்தோ அல்லது 044-27660250, 8489866698 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மாதிரி முழுத் தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *