Mon. Oct 13th, 2025

அனைத்துமே இலவசம்.மாதம் ரூ.10000 ஊக்கத்தொகையோடு இலவச அர்ச்சகர் பயிற்சி / Free priest training with an incentive of Rs. 10,000 per month

தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!

அனைத்துமே இலவசம்.மாதம் ரூ.10000 ஊக்கத்தொகையோடு இலவச அர்ச்சகர் பயிற்சி / Everything is free. Free priest training with an incentive of Rs. 10,000 per month

தமிழ்நாடு, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2025 – 2026 கல்வியாண்டின் மாணவ சேர்க்கை இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

அர்ச்சகர், ஓதுவார், வேதாகம, மற்றும் தமிழிசை பயிற்சி நிலையங்களில், இந்து சமயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஆன்மீகம் மற்றும் கோவில் சார்ந்த பணிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அழித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பயிற்சி நிலையங்களில் மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் மற்றும் கல்வித் தகுதிகள் உள்ளன. பயிற்சி நிறைவடைந்ததும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.

மாணவர்களுக்கு பயிற்சியின் போது உணவு, தங்குமிடம், உடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் என அனைத்துமே திருக்கோவில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் திருக்கோவில் இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி விவரங்கள்:

1.அர்ச்சகர் பயிற்சிக்கு தேவையான தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பயிற்சி காலம் ஒரு ஆண்டு, முழு நேர பயிற்சி அளவுக்கு மாதம்தோறும் ரூ. 10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும், பகுதி நேர பயிற்சியாளருக்கு ரூ.5000.

2. ஓதுவார் பயிற்சிக்கு தேவையான தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பயிற்சி காலம்- 3 ஆண்டுகள் முழு நேர பயிற்சியாளர்களுக்கு அதுவே பகுதி நேர பயிற்சியாளர்களுக்கு 4 ஆண்டு. ஊப்புத்தொகை முழு நேர பயிற்சியாளருக்கு ரூபாய் பத்தாயிரம், பகுதி நேர பயிற்சியாளருக்கு ரூபாய் ஐயாயிரம்.

3. வேதாகம பாடசாலை: கல்வித் தகுதி -ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் ஐந்து ஆண்டு, மாதம் தோறும் ஊக்க தொகை ரூபாய் 10 ஆயிரம்.

4.தமிழிசை பயிற்சி நிலையம்: கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் மூன்று ஆண்டு, ஊக்குத்தொகை 10,000.

அர்ச்சகர் மற்றும் ஓதுவருக்கு வயது 14 முதல் 24 குழு இருக்க வேண்டும். வேதாகமப் பாடசாலைக்கு 12 முதல் 16 வயது. தமிழிசை பயிற்சிக்கு 13 முதல் 16 வயது உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *