சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு / Free training course for uniformed service selection
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இரண்டாம் நிலைக்காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் என 3,464 காலிப்பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வேலூா், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 2290042, 94990 55896 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.