IT துறையில் வேலை – வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவச பயிற்சி / Free training in IT sector – Success guaranteed project
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தகவல் தொழில்நுட்ப சார்ந்த பல்வேறு வேலைகளுக்கான திறன் பயிற்சியை இந்த மாதம் முதல் வழங்க உள்ளது.
16 வகையான பயிற்சிகளுக்கு வேலை தேடும் இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி நிச்சயம் திட்டம்
தமிழ்நாட்டில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், இலவசமாக திறன் பயிற்சி அளித்து தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற உதவும் திட்டம்தான் வெற்றி நிச்சயம் திட்டம். இத்திட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இளைஞர்களுக்கு இலவசமாக குறுகிய கால பயிற்சி வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். நான் முதல்வன் திட்டத்தை அடுத்து இந்த திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். அவர்களுக்கு உணவுடன் தங்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்படும். மேலும், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.12,000 உதவித்தொகையும் அளிக்கப்படும்.
வளர்ச்சி பாதையில் தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவில் “ஐடி” துறையில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. இதில் சென்னை மாவட்டம் ஐடி துறையின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த துறையில் தற்போதைய நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தமிழ்நாட்டில் சேர்ந்த மாணவர்கள் ஐடி துறையில் சாதிக்கும் வகையில், அதிக தேவை உள்ள 16 வகையான பணிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறை பணிக்கு பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து, “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 20,000 வேலைத்தேடும் இளைஞர்கள் தொழில்துறை சார்ந்த மேம்பட்ட திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?
- J2EE Programming
- Microsoft Power BI Data Analytics
- Robotic Process Automation (UiPath)
- Microsoft Azure Artificial Intelligence Engineer
- Salesforce Platform Developer
- Salesforce Administrator
- MongoDB Associate Developer
- Google Cloud Engineer
- Premier Banker
- Angular JS
- Asp.Net Programming
- Advanced Python Programming
- Data Analytics using Python
- Digital Marketing
- Networking and Cybersecurity Essentials (CISCO)
எங்கு நடைபெறும்?
தகவல் தொழில்நுட்ப துறைக்கான பயிற்சிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இப்பயிற்சியில் 2022 முதல் 2025 கல்வி ஆண்டில் CSE,ECE,EEE ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்ற பொறியியல் மாணவர்கள், BCA, B.Sc, CS, MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை/ அறிவியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். குறிப்பாக அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்காக இடமாற்றம் செய்ய தயராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதார்கள் 21 முதல் 15 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டம் மூலம் சவால் நிறைந்த தொழில்நுட்ப துறையில் திறமையான இளைஞர்களை உருவாகி தமிழ்நாட்டை இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இப்பயிற்சிகளை பெற விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளத்தில் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வெற்றி நிச்சயம் என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை பெற ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.