கூட்டுறவு சங்க பணியிடத்துக்கான தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி / Free training to participate in the Cooperative Society recruitment exam
கூட்டுறவு சங்க எழுத்தா், உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ள கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான தோ்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 20-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
இத்தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.