நாட்டுக்கோழி வளா்க்க இலவச பயிற்சி பெறலாம் – பெரம்பலூா் / Get free training on raising domestic chickens
பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவுச்சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் ஆக. 12 ஆம் தேதி நடைபெறும் முகாமில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளா்ப்பு இனங்கள், அவற்றின் இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறை மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 என்னும் எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரை பதிந்து பயிற்சி பெறலாம் என அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.