சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உச்சம் தொட்டது. இடையிடையே தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.
தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 2-வது முறையாக மாலையும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

