Sun. Mar 1st, 2026

அமெரிக்கா-ஈரான் மோதல் எதிரொலி; தங்கம், வெள்ளி விலை உயர்வு – Gold / Silver Rate

அமெரிக்கா-ஈரான் மோதல் எதிரொலி; தங்கம், வெள்ளி விலை உயர்வு - Gold / Silver Rate
அமெரிக்கா-ஈரான் மோதல் எதிரொலி; தங்கம், வெள்ளி விலை உயர்வு - Gold / Silver Rate

அமெரிக்கா-ஈரான் மோதல் எதிரொலி; தங்கம், வெள்ளி விலை உயர்வு – Gold / Silver Rate

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்றும் (மார்ச் 01) தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளன.

சர்வதேச நிலவரங்களால், கடந்த பிப்ரவரியில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்வரி 27) ஆபரண தங்கம் கிராம் 14,900 ரூபாய்க்கும், சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (பிப்ரவரி 28) காலை தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது.

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, 1,24,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கிலோவுக்கு 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு 25,000 ரூபாயும், சவரனுக்கு 5,200 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்றும் (மார்ச் 01) தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளன. சென்னையில் இன்று (மார்ச் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியும் உயர்வு

கிராமுக்கு 225 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 5200 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 1800 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 325 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *