ரூ.80,000 சம்பளத்துடன் Google இண்டர்ன்ஷிப்
இந்தியாவில் ஹைதராபாத், குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான இண்டர்ன்ஷிப் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த இண்டர்ன்ஷிப் மூலமாக ரூ.80,000 வரையிலும் ஸ்டைஃபண்ட் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் careers.google.com என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், யார் யாரெல்லாம் இந்த இன்டர்ன்ஷிப்பில் கலந்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, மென்பொருள் மேம்பாடு, அதன் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளில் அசோசியேட், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். அடுத்ததாக, மென்பொருள் மேம்பாடு பற்றி அறிந்திருக்க வேண்டும் எனவும், C,C++,Java, JavaScript, Python ஆகியவற்றை கற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இன்டர்ன்ஷிப் 5 மாதத்திற்கு மேலாக நடைபெறும் எனவும், விருப்பமுள்ளவர்கள் அக்.1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.