DMart-ல் பாதி விலையில் பொருட்கள் / Half price items at DMart
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கும் குறைவான சலுகைகளை அறிவித்துள்ளது.மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பாத்திரங்கள் என அனைத்திலும் பெரும் தள்ளுபடிகள் உள்ளன.
பண்டிகை காலம் வந்துவிட்டால், வீட்டுத் தேவைகளுக்கு அதிகம் செலவாகும். அப்போது வாடிக்கையாளர்களின் சுமையை குறைக்க டிமார்ட் (DMart) எப்போதும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இப்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, “பாதிக்கும் குறைவான விலை” என்ற அதிரடி ஆஃபரை டிமார்ட் அறிவித்துள்ளது.
மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், அழகுசாதனங்கள் என அனைத்தையும் “ஒவ்வொரு நாளும் குறைந்த விலை” உடன் வழங்கும் இந்தியாவின் பிரபல சில்லறை வணிக நிறுவனம் தான் டிமார்ட். நடுத்தர மற்றும் சாதாரண வருமானக் குடும்பங்கள் அதிகம் நம்பும் கடையாக இது உள்ளது.
இந்த மாதம் 27-ம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கும் குறைவான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வார இறுதி ஷாப்பிங் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு ஆகும்.
பிரிட்டானியா ஜிம் ஜாம் பாப்ஸ் பிஸ்கட் பாக்கெட்டின் MRP ரூ.120. வழக்கமாக ரூ.75க்கு விற்கப்பட்டாலும், இப்போது ரூ.60க்கே கிடைக்கிறது. பிரிட்டானியா சீஸ் பேக் – அசல் விலை ரூ.460, இப்போது வெறும் ரூ.230. பளபளப்பான ஃப்ரெஷ் டாய்லெட் கிளீனர் – MRP ரூ.225, ஆனால் ரூ.112க்கே வழங்கப்படுகிறது.
தத்வா துவரம் பருப்பு கிலோ ரூ.365க்கு பதிலாக ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. சஃபோலா மீல் மேக்கர் ரூ.150க்கு பதிலாக ரூ.75-க்கும், எபிஸ் கிளாசிக் பேரீச்சம் பழம் (½ கிலோ) ரூ.199க்கு பதிலாக ரூ.99-க்கும் விற்பனை ஆகிறது.
சாக்லேட், பிஸ்கட் வகைகளிலும் பெரும் தள்ளுபடி. உதாரணமாக, Sunfeast Dark Fantasy Bourbon பிஸ்கட் (MRP ரூ.180), தற்போது ரூ.83க்கு மட்டுமே கிடைக்கிறது. பாத்திரங்கள், குக்கர் போன்றவற்றிலும் தள்ளுபடி. குறிப்பாக Butterfly 5.5 லிட்டர் ஸ்டீல் குக்கர் – MRP ரூ.4,851. தற்போது வெறும் ரூ.1,949க்கு கிடைக்கிறது.
மாத இறுதி + பண்டிகை சீசன் என்பதால், ஸ்டாக்கை அகற்ற டிமார்ட் இந்த பெரிய தள்ளுபடிகளை வழங்குகிறது. அடுத்த வாரம் முழுவதும் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இது தவறவிடக்கூடாத வாய்ப்பு ஆகும்.