வீட்டு உபயோக சாதனங்கள் சேவை, பழுது நீக்கும் இலவச பயிற்சி / Home appliance service, repair free training
ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், வீட்டு உபயோக சாதனங்கள் சேவை மற்றும் பழுது நீக்கும் இலவச பயிற்சி பெற, பெரம்பலூா் மாவட்ட இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் -எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், வீட்டு உபயோக சாதனங்கள் சேவை மற்றும் பழுது நீக்கும் பயிற்சி அக். 3 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து 30 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி அளிக்கப்படும் பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் இலவசமாக வழங்கப்படும். வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப் பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத த் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண், இலக்கு எண், குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் யாரேனும் 100 நாள் திட்ட அடையாள அட்டையுள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில், ஐஓபி வங்கி மாடியிலுள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் அக். 1 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328–277896, 8489065899, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.