IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு
Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது Group “A”-Officers Scale-I குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கென ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதன்படி ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதற்கட்டத் தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலுவலக உதவியாளர் (கிளார்க்) பிரிலிம்ஸ் தேர்வுகள் ஆகஸ்ட் 10, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது IBPS ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Group “A”-Officers Scale-I தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதியுடன் தங்கள் பதிவு எண் அல்லது ரோல் எண்ணை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.