தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரசு சார்பில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பலன்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 1271 ரேஷன் கடைகள் இயங்கி வரும் நிலையில் அனைத்து கடைகளிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்னும் 10,159 பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள நிலையில் அவர்கள் விரைவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Post published:13 September 2023
- Post comments:0 Comments
- Post category:Latest News