தமிழகத்தில் அரசு அறிவித்த ரூ. 1000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – விவரங்களை அறிய அரசின் உதவி மையம்
தமிழகத்தில் அரசு அறிவித்த படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய சுமார் 1 கோடி 6 லட்சம் பேருக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது.
இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விண்ணப்பித்த பலருக்கும் பல்வேறு காரணங்களால உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதனால் அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து மேல்முறையீடு செய்து உரிமை தொகையை பெறலாம் அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறியலாம் என அரசு தெரிவித்தது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் நாளை முதல் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக குடும்ப தலைவிகள் விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்பதிவு தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணலாம். அத்துடன் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணம் வந்தடையாமல் இருப்பது குறித்தும் தெரிவிக்கலாம்.