இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு முகாம் / Indian Air Force Job Camp
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை சார்பில், தாம்பரத்தில் உள்ள விமானப்படை தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
இந்த முகாமில், ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வரும் செப்.2ம் தேதியும், ெபண் விண்ணப்பதாரர்களுக்கு செப். 5ம் தேதியும் முகாம் நடக்கவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்புக்கு சமமான (ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்) மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி பதினேழரை ஆண்டுகளுக்கு மேற்பட்டும், 21 ஆண்டுகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்திய விமானப்படையில் சேவை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், இந்த வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |