Mon. Mar 30th, 2026

Indian Army Nurse and Veterinary Assistant Job

Indian Army Nurse and Veterinary Assistant Job
Indian Army Nurse and Veterinary Assistant Job

Indian Army Nurse and Veterinary Assistant Job

ராணுவத்தில் செவிலியர் உதவியாளர் (தொழில்நுட்பம்) மற்றும் கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து…

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள செவிலியர் உதவியாளர் (தொழில்நுட்பம்) மற்றும் கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nursing Assistant (Technical,Veterinary)

சம்பளம்: மாதம் ரூ.30,000 – 40,000

வயது வரம்பு: 17½ முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 163 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ. அகலம், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: 1.6 கி.மீ. தூரத்தை 6.15 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். Squats,Pushups, Situps நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். விளையாட்டு வீரர்கள், என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 1.6.2026 முதல் 15.6.2026

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.4.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *