Sun. Aug 31st, 2025

இன்றைய ராசி பலன் / Today’s horoscope

இன்றைய ராசி பலன் – 04.08.2025

மேஷ ராசி
மேஷ ராசி இன்று எந்த எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்கள் நாள் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்க்கவும். சொந்த வியாபாரம் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும். பணம் தொடர்பான விஷயங்களில் உங்களின் முதலீடுகள் லாபத்தை தரும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியினர் ஆக்ரோஷமாக எதிலும் செயல்படுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஆபத்தான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணம் சார்ந்த விஷயங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். ஆரோக்கியம் தொடர்பாக பணம் செலவாக வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்கவும். கோபத்திலும், ஆர்வக்கோளாறாகவும் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். இன்று சட்ட ஒழுங்கில் கவனம் தேவை. மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நன்மை கிடைக்கும்.
கடக ராசி
கடக சராசினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம். படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் அதை விரிவு படுத்துவதற்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி
சிம்ம ராசியினர் கடினமான சூழ்நிலையில் அதிகமாக எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். அவசர முடிவுகளால் பின்னர் வருத்தப்பட வேண்டியது இருக்கும். தொழில்நுட்பத் துறையில் புதிய யோசனையுடன் செயல்படுவீர்கள். பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. கடினமான பணிகளை முடித்து முன்னேறுவீர்கள்.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களின் மூளை திறன் அதிகமாக இருக்கும். அதனால் கடினமான பணிகளை கூட புத்திசாலித்தனமாகச் செய்து முடிக்க முடியும். உங்களின் வருவாய் அதிகரிக்க கூடிய நாள்.

துலாம் ராசி
துலாம் ராசி தெரிந்தவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். பணம் சார்ந்த விஷயங்களில் குழப்பமான சூழல் இருக்கும். கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு பேச்சிலும் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்களின் திட்டங்களை சரியாக பகுப்பாய் ஆய்வு செய்து செயல்படவும். சரியான நேரத்தில் முடிவு எடுப்பது நல்லது. இன்று பணம் பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

தனுசு ராசி
தனுசு ராசிக்கு இன்று மன உறுதியற்ற தன்மை இருக்கும். வேலையில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று அதிகமாக சிந்திப்பீர்கள். பழைய தவறுகளில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
மகர ராசி
மகர ராசிக்கு இன்று தேவையற்ற பயம் மனதில் ஏற்படும். வீண் கவலை உண்டாகும். இருப்பினும் உங்கள் வேலை தொடர்பாக சிரமங்கள் ஏதும் இருக்கிறது. இதில் ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய நாள். மனதில் அமைதி அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நாள்.

கும்ப ராசி
கும்ப ராசிக்கு இன்று வேலைகள் அனைத்தும் சரியாக செய்து முடிக்க முடியும். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தீர்கள். வருமானம் முன்னேறுவதற்கான நாள். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. சட்ட ஆவணங்களை முழுமையாக கவனிப்பது நல்லது.
மீன ராசி
மீன ராசிக்கு ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் பணத்தை நேர்மறையான விஷயங்களில் செலவிடவும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம். முதலீடு சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.