Sun. Dec 21st, 2025

தமிழ்நாடு அச்சுத்துறையில் ரூ.71,900 வரை சம்பளத்தில் வேலை; புத்தகம் கட்டுநர் பணி / Job in Tamil Nadu printing industry with salary up to Rs. 71,900; Book binding job

தமிழ்நாடு அச்சுத்துறையில் ரூ.71,900 வரை சம்பளத்தில் வேலை; புத்தகம் கட்டுநர் பணி / Job in Tamil Nadu printing industry with salary up to Rs. 71,900; Book binding job

தமிழ்நாடு அரசின் துறையின் பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் எஸ்சி/எஸ்டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இளநிலை புத்தகம் கட்டுநர் (Junior Binder) பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம் பணியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
இளநிலை புத்தகம் கட்டுநர்5

ஆதிதிராவிடர் பிரிவில் – 1, பழங்குடியினர் பிரிவில் – 4 என அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும், அதிகபட்சமாக வயது 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • இளநிலை புத்தகம் கட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பைண்டிங் (Binder) தொழிற்பிரிவில் ஐடிஐ அல்லது தொழிற்பயிற்சி சட்டம் 1961 கீழ் தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • இப்பதவிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியை விட உயர்க்லவித் தகுதி பெற்றுள்ளோர்க்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் 2016-ன்படி, உச்ச வயது வரம்பு நிர்ணயம் கிடையாது.

சம்பள விவரம்
புத்தகம் கட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.19,500 முதல் தொடங்கி ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு அரசில் சிறப்பு ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடன் உள்ள விண்ணப்பதார்கள் https://www.stationeryprinting.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19 தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி சான்றிதழ்கள்
  • மாற்றுச் சான்றிதழ்
  • வகுப்பு பிரிவு சான்றிதழ் (ஜாதி சான்றிதழ்)
  • வயதுக்குரிய சான்றிதழ்
  • முகவரிக்கான சான்றிதழ் (ஆதார்/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை/பான்)
  • இருப்பிட சான்று (ஆதார்/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை/பான்)
  • இதர தகுதிகளுக்கான சான்றிதழ்

நிபந்தனைகள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்.
  • விண்ணப்பத்தை அனுப்பும் தபால் உறையின் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – இளநிலை புத்தகம் கட்டுநர்” என எழுதப்பட வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் இடப்பட வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பித்தில் ஒட்டப்படும் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை சுயவிலாசமிட்டு அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை,
ஆணையரகம்,
110, அண்ணா சாலை,
சென்னை – 2.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்29.08.2025 மாலை 05.30 மணி வரை
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு அரசு துறையின் இருக்கும் இப்பணியிடங்களுக்கு தகுதி உடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்குள் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION: CLICK HERE

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *