கோவை ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை / Job openings at Coimbatore IT company
கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கோவை புளியகுளம் ரோட்டில் தாம் நகர் அமைந்துள்ளது. இங்கு Infolexus Solutions என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் எண்ட் டூ எண்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ், எச்ஆர் சர்வீசஸ், ஐடி சர்வீசஸ், மேன்பவர் சொல்யூஷன்ஸ், டிரெய்னிங் மற்றும் டெவலப்மென்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தInfolexus Solutions நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய அறிவிப்பின்படி டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டேட்டா அனலிஸ்ட் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் 0- 1 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரி படிப்பை முடித்தவர்களும் அனுபவம் இன்றி விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் அவர்களுக்கு எஸ்க்யூஎல் (SQL) நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரிலேஷனல் டேட்டாபேஸஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா விசுவலைசேஷன் டூல்ஸ்களான Tableau, Power BI, Looker உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Excel-ல் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பைத்தான் அல்லது Ris தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்டாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய: Click Here