B.sc, BA, B.Com, BBA, BCA முடித்தோருக்கு கோவை Accenture.ல் வேலை / Jobs at Accenture in Coimbatore for B.sc, BA, B.Com, BBA, BCA graduates
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு (Accenture IT Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர் உள்பட மொத்தம் 11 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரம் வருமாறு:
அக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போது சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System And Application Services Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 2024ம் ஆண்டுக்குள் பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிபிஏ, பிசிஏ, உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள், பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. அதேபோல் இன்ஜினியரிங் முடித்தோர் விண்ணப்பம் செய்ய முடியாது.
அக்சென்ச்சர் நிறுவனத்தில் கடைசியாக 3 மாதத்துக்குள் ஏதாவது இண்டர்வியூ அட்டென் செய்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் அதேபோல் டிகிரி முடித்தவர்கள் 0 – 23 மாதம் (0- 1 ஆண்டு 11 மாத அனுபவம்) வரை சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாமல் மேற்கண்ட டிகிரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எந்த லோகேஷன் மற்றும் ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு 10 நிமிடம் Mock/Practice Assesment, Cognitive Assessment 50 கேள்விகளுடன் இருக்கும். ஆங்கிலத்தில் பேசுவது, கிரிட்டிக்கல் திங்கிங் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன் மற்றும் அப்ஸ்ட்ராக்டஸ் ரீசனிங் உள்ளிட்டவை இருக்கும். அதன்பிறகு காக்னிடிவ் மற்றும் டெக்னிக்கல் அசஸ்மென்ட் 90 நிமிடங்கள் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யClick Here