B.SC, B.com. BA படித்தோருக்கு வேலை.. அதுவும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை சென்னையில் இண்டர்வியூ / Jobs for B.SC, B.com. BA graduates.. and that too at HCL IT company, interview tomorrow in Chennai
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை.
ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் நாளை (செப்டம்பர் 3) சென்னை எச்சிஎல் அலுவலகத்தில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் Frehsers Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Arts மற்றும் Science பிரிவில் எந்த சப்ஜெக்ட்டில் டிகிரி முடித்திருந்தாலும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக், பிசிஏ, பிஇ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இண்டர்வியூ செல்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகள் தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். இது Freshers-களுக்கான அறிவிப்பு என்பதால் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். அனைத்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டும். குறிப்பாக US Shift இருக்கும். அதாவது நைட்ஷிப்ட் இருக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 3) காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No. 602/3/138, Special Economic Zone, Elcot-Sez, Medavakkam High Road, Sholinganallur, Chennai – 600119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யClick Here