கலாட்சேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025 – TGT கணிதம் பணியிடம் | நேர்காணல்
சென்னை கலாட்சேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation) 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் TGT (Trained Graduate Teacher) – கணிதம் பணியிடத்தை நிரப்ப உள்ளது. கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு மற்றும் பி.இட் (B.Ed) முடித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 28 அக்டோபர் 2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் kalakshetra.in-ஐ பார்வையிடலாம்.
காலியிடங்கள்
| பணியிடம் | காலியிடங்கள் |
|---|---|
| TGT (கணிதம்) | 01 |
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், பி.இட் (B.Ed) முடித்திருத்தல் அவசியம்.
வயது வரம்
வயது வரம்பு அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
சம்பளம் – அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் குறிப்பிடப்படவில்லை.
தேர்வு நடைமுறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Walk-in Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது
தகுதியான விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் 28.10.2025 காலை 9.00 மணிக்கு கலாட்சேத்ரா அறக்கட்டளை அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

