மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள்
திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Driver, Lab Technician, Dental Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Driver, Lab Technician, Dental Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Dental Medical Officer – 1 பணியிடம்
- Data Manager – 1 பணியிடம்
- Vaccine Cold Chain Manager – 2 பணியிடங்கள்
- MMU Cleaner / Lab Assistant – 4 பணியிடங்கள்
- MMU Driver – 1 பணியிடம்
- Lab Technician – 6 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Dental Medical Officer – Bachelor’s degree in Dental Science.
- Data Manager – M.Sc in CS / BE in IT / Electronics
- Vaccine Cold Chain Manager – Graduation Degree in Business Administration
- MMU Cleaner / Lab Assistant – 8ம் வகுப்பு
- MMU Driver – 8ம் வகுப்பு
- Lab Technician – Diploma in Medical Lab Technology.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Dental Medical Officer – ரூ.34,000/-
- Data Manager – ரூ.20,000/-
- Vaccine Cold Chain Manager – ரூ.23,000/-
- MMU Cleaner / Lab Assistant – ரூ.8,500/-
- MMU Driver – ரூ.13,500/-
- Lab Technician – ரூ.13,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.