Wed. Mar 25th, 2026

புள்ளியியல் படிக்கலாம்! / Let’s study statistics!

புள்ளியியல் படிக்கலாம்! / Let's study statistics!
புள்ளியியல் படிக்கலாம்! / Let's study statistics!

புள்ளியியல் படிக்கலாம்! / Let’s study statistics!

புள்ளியியல் சார்ந்த படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம், ஐ.எஸ்.ஐ., எனும் ‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’.

வளாகங்கள்:

கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டுள்ள இக்கல்வி நிறுவனம், பெங்களூரு, புதுடில்லி, சென்னை, ஹைதராபாத், தேஷ்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:

* பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் – பி.ஸ்டேட்., ஹானர்ஸ்
* பேச்சுலர் ஆப் மேத்மெடிக்ஸ் – பி.மேத்., ஹானர்ஸ்
* பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் டேட்டா சயின்ஸ் – பி.எஸ்.டி.எஸ்., ஹானர்ஸ்

முதுநிலை படிப்புகள்:

* மாஸ்டர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் – எம்.ஸ்டேட்.,
* மாஸ்டர் ஆப் மேத்மெடிக்ஸ் – எம்.மேத்.,
* எம்.எஸ்., இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் அண்டு பிசினஸ் அனெலடிக்ஸ் – எம்.எஸ்., கியூ.எம்.பி.ஏ.,
* எம்.எஸ்., இன் குவாண்டிடேடிவ் எக்னாமிக்ஸ் – எம்.எஸ்., கியூ.இ.,
* எம்.எஸ்., இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் – எம்.எஸ்., எல்.ஐ.எஸ்.,
* எம்.டெக்., இன் கம்பியூட்டர் சயின்ஸ் – எம்.டெக்., சி.எஸ்.,
* எம்.டெக்., இன் கிரிப்டாலஜி அண்ட் செக்யூரிட்டி – எம்.டெக்., சிஆர்.எஸ்.,
* எம்.டெக்., இன் குவாலிட்டி, ரிலயப்லிட்டி அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச் – எம்.டெக்., கியூ.ஆர்.ஓ.ஆர்.,

* பி.ஜி.டிப்ளமா இன் ஸ்டேடிஸ்டிக்கல் மெத்தட்ஸ் அண்டு அனலட்டிக்ஸ்
* பி.ஜி.டிப்ளமா இன் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் மெனேஜ்மெண்ட் வித் ஸ்டேடிஸ்டிக்கல் மெதட்ஸ் அண்ட் அனலடிக்ஸ்
* பி.ஜி.டிப்ளமா இன் பிசினஸ் அனெலடிக்ஸ்
* பி.ஜி.டிப்ளமா இன் அப்ளைடு ஸ்டேடிஸ்டிக்ஸ்
* பி.ஜி.டிப்ளமா இன் ஸ்டேடிஸ்டிக்கல் கம்ப்யூடேஷனல் ஜெனோமிக்ஸ்

* ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்

தகுதிகள்:
பொதுவாக, இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவராகவும், முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். படிப்பிற்கு ஏற்ப தகுதி மாறுபடும்.

உதவித்தொகை:
படிப்பை பொறுத்து, மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சேர்க்கை முறை:
ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் https://admission.isical.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ‘ஐ.எஸ்.ஐ., அட்மிஷன் டெஸ்ட்’ வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தேர்வு நடைபெறும் நாள்:
மே 10, 2026

விண்ணப்பிக்க கடைசி நாள்:
மார்ச் 26, 2026
பி.எஸ்.டி.எஸ்., படிப்பிற்கு மட்டும் ஏப்ரல் 28 முதல் மே 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு:
www.isical.ac.in

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *