LIC நிறுவனத்தில் 841 காலிப்பணியிடங்கள் / 841 vacancies in LIC
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மொத்தம் 841 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், சிஏ முடித்தவர்கள், ICSI தகுதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
உதவி நிர்வாக அலுவலர்கள் (Generalist) | 350 |
உதவி நிர்வாக அலுவலர்கள் (Specialist) | 410 |
உதவி பொறியாளர் (சிவில்) | 50 |
உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) | 31 |
மொத்தம் | 841 |
உதவி நிர்வாக அலுவலர்கள் (Specialist) காலிப்பணியிடங்களின் விவரம்
பதவியின் பிரிவு | பணியிடங்கள் |
AAO (CA) | 30 |
AAO (CS) | 10 |
AAO (Actuarial) | 30 |
AAO (Insurance Specialist) | 310 |
AAO (Legal) | 30 |
மொத்தம் | 410 |
வயது வரம்பு
எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபடியாக வயது வரம்பு 30 ஆகும். இருப்பினும், சிஏ மற்றும் சட்டப்பிரிவு பணியிடங்களுக்கான அதிகபடியான வயது வரம்பு 32 ஆக உள்ளது.
மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவிற்கு 3 வருடங்கள் தளர்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
- பொதுப் பிரிவு உதவி நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- உதவி பொறியாளர் (சிவில்) பதவிக்கு B.Tech/B.E முடித்திருக்க வேண்டும்.
- உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பதவிக்கு B.Tech/B.E முடித்திருக்க வேண்டும்.
- CA பிரிவிற்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் சிஏ இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- CS பிரிவிற்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் ICSI பெற்றிருக்க வேண்டும்.
- Actuarial பிரிவிற்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் பதவிற்கான பிரிவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Insurance Specialist பிரிவிற்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் Life Insurance ப்ரோபேஷனல் தகுதி பெற்றிருகக் வேண்டும். மேலும் 5 ஆண்டு அனுபவம் தேவை.
- சட்டப்பிரிவிற்கு சட்டத்தில் ஏதேனும் டிகிரியை பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.88,635 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.88,635 முதல் அதிகபடியாக ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எல்.ஐ.சி நிறுவன பணிக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. அதன் மதிப்பெண்கள் இறுதி கட்டத்திற்கு எடுத்துகொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முறை
காப்பீடு நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://licindia.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.700 மற்றும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.85 கூடுதலாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 16 முதல் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 3-ம் தேதியும், முதன்மைத் தேர்வு நவம்பர் 8-ம் தேதியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விவரம் | தேதி |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் | 16.08.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 08.09.2025 |
முதல்நிலைத் தேர்வு | 03.10.2025 |
முதன்மைத் தேர்வு | 08.11.2025 |
எல்.ஐ.சி-யில் அதிக சம்பளத்தில் வெளியாகியுள்ள இந்த வாய்ப்பை பட்டதாரிகள் உடனே பயன்படுத்திகொள்ளலாம். தேர்வு முறை விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். தேர்விற்கு 7 நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டு வெளியிடப்படும்.