எல்ஐசி நிறுவனத்தில் வேலை.. 192 பணியிடங்கள் / LIC job openings: 192 vacancies
எல்.ஐ.சி (LIC JOB) ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 192 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் சென்னையில் 10 இடங்களும், கோவையில் 6 இடங்கள் என பல்வேறு மாவட்டங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட பிற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி உள்ளது. இந்த எல்.ஐ.சியின் துணை நிறுவனமாக எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனம் உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகும்.
பணியிடங்கள் விவரம்:
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மொத்தம் 192 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 27 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுவையில் ஒரு பணியிடமும், கேரளாவில் 6 பணியிடமும், கர்நாடகாவில் 28 பணியிடங்களும் உள்ளன.
கல்வி தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 24.09.2025 தேதிப்படி 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு?
பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை நுழைவுத்தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டனத்தை பொறுத்தவரை ரூ.944 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.708 விண்ணப்ப கட்டணம் ஆகும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 02.09.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 24.09.2025 ஆகும்.
தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணி நியமனம் நவம்பர் 1 அன்று நடைபெறும் (தோராயமானது).
தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 10, கோவை – 06, ஓசூர் -02, காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், மதுரை, திருவள்ளூர், நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பணியிடமும் திருப்பூரில் 2 பணியிடமும் உள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cdn.lichousing.com/2025/09/Apprentecis-Advertisement-Notification-LICHFL-004.pdf