Tue. Jul 22nd, 2025

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் Driver, Night Watchman, Office Assistant, Watchman, Attender, Masalchi மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 73 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver, Night Watchman, Office Assistant, Watchman, Attender, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff பணிக்கென காலியாக உள்ள 73 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
    • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
    • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test & Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Download Notification

    Related Post

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *