தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் – 250+ பணியிடங்கள் / National Hydropower Generation Company – 250+ vacancies
மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
உதவி ராஜ்பாஷா அதிகாரி – 11
ஜூனியர் பொறியாளர் (சிவில்) – 109
ஜூனியர் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) – 46
ஜூனியர் பொறியாளர் (மெக்கானிக்கல்) – 49
ஜூனியர் பொறியாளர் (E & C) – 17
மேற்பார்வையாளர் (IT) – 1
சீனியர் கணக்காளர் – 10
இந்தி மொழிப்பெயர்ப்பாளர் – 5
வயது வரம்பு: மத்திய அரசி நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி:
* உதவி ராஜ்பாஷா அதிகாரி – இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் பாடமாக கொண்ட முதுகலை பட்டப்படிப்பு இருக்க வேண்டும்.
* ஜூனியர் பொறியாளர் – சிவில் பொறியியல் / எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* மேற்பார்வையாளர் (Supervisor) – DOEACC உடன் டிகிரி (அல்லது) கணினி அறிவியல் / ஐடி-யில் டிப்ளமோ (அல்லது) பிசிஏ / கணினி அறிவியல் / ஐடி-யில் B.Sc. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* சீனியர் கணக்காளர் (Senior Accountant) – CA / CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இந்தி மொழிபெயர்ப்பாளர் – இந்தி பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (அல்லது) ஆங்கிலத்துடன் இந்தி மொழி கொண்ட முதுகலை பட்டப்படிப்பு. குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.
சம்பளம்:
* உதவி ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* ஜூனியர் பொறியாளர் பதவிக்கு ரூ.29,600 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
* மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.29,600 முதல் ரூ.1,19,500 சம்பளம் வழங்கப்படும்.
* சீனியர் கணக்காளர் பதவிக்கு மாதம் ரூ. 29,600 முதல் ரூ.1,19,500 வழங்கப்படும்.
* இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பதவிக்கு ரூ.27,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test) நடத்தப்படும்.
- தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
- மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட Objective Type கேள்விகள் கேட்கப்படும்.
- Negative Marking உண்டு.
- பொது பிரிவு (General/OBC/EWS): 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
- எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் (SC/ST/PwBD): 35% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
- தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
- சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்களுக்கு இறுதி நியமன ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nhpcindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.