Fri. Jul 25th, 2025

NEET 2024-2025 தேர்வு முடிவுகள் வெளியீடு

NEET 2024-2025 தேர்வு முடிவுகள் வெளியீடு

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2024-25 ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேலான தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வில் 1.3 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 05.06.2024 அன்று தேர்வு முடிவுகள் (NEET UG 2024) வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உங்கள் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். தேர்வு முடிவுகளை பெற https://neet.ntaonline.in/frontend/web/scorecard/index என்ற அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *