போட்டித் தேர்வுகளுக்கான புதிய செயலி (New app) அறிமுகம் – அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில்..!
தமிழ் நாட்டில் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் அரசு வேலை என்னும் கனவுடன் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த தேர்வுகளுக்கான விவரங்களை அறிய தேர்வர்கள் பலவேறு இணையதளங்கள் மற்றும் செயலிகளை நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழ் நாடு அரசு தேர்வுக்களம் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த செயலியை தொடங்கி வைத்தார்.
இந்த செயலி மூலம் அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், ஆன்லைன் வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி………?
‘தேர்வுக்களம்’ செயலியை Play Store அல்லது App Store மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, உள்நுழைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான நடைமுறையாகிவிடும் என அரசு தெரிவித்துள்ளது.

