NHAI வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 84 Group A, B & C பணியிடங்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI – National Highways Authority of India) சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 84 பணியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 30 அக்டோபர் 2025 (காலை 10.00 மணி) முதல் 15 டிசம்பர் 2025 (மாலை 6.00 மணி) வரை அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்
மேலும் கண்டறிக
பாடநெறி பயிற்சி வகுப்புகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
examsdaily
நேர்காணல் தயாரிப்பு உதவி
கல்வி உதவி மையங்கள்
கல்வி செய்திமடல் சந்தா
கல்வித்
சிறப்பு பயிற்சி கையேடுகள்
போட்டித் தேர்வு பயிற்சி
போட்டித் தேர்வு தயாரிப்பு
| பதவி பெயர் | பதவி வகை | காலியிடங்கள் |
|---|---|---|
| Deputy Manager (Finance & Accounts) | Group A | 09 |
| Library & Information Assistant | Group B | 01 |
| Junior Translation Officer | Group B | 01 |
| Accountant | Group C | 42 |
| Stenographer | Group C | 31 |
| மொத்தம் | 84 |
கல்வித் தகுதி
- Deputy Manager (Finance & Accounts): MBA (Finance) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Library & Information Assistant: Library Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Junior Translation Officer:
- ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் Master’s Degree (இரு மொழிகளிலும் தகுதி அவசியம்).
- ஹிந்தி ↔ ஆங்கில மொழிபெயர்ப்பில் அனுபவம் அல்லது அதற்கான டிப்ளமா இருக்க வேண்டும்.
- Accountant:
- Bachelor’s Degree மற்றும்
- Chartered Accountant (CA) / Cost Management Accountant (CMA) இடைநிலை தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- Stenographer:
- Bachelor’s Degree மற்றும் 80 WPM Short Hand திறன் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி).
- கணினியில் ஆங்கிலம் – 50 நிமிடம், ஹிந்தி – 65 நிமிடம் டைப் செய்யும் திறன்.
வயது வரம்பு
- Deputy Manager / Library Assistant / JTO / Accountant – அதிகபட்சம் 30 வயது
- Stenographer – அதிகபட்சம் 28 வயது
சம்பள விவரம்
| பதவி பெயர் | Pay Level | சம்பளம் (₹) |
|---|---|---|
| Deputy Manager | Level 10 | ₹56,100 – ₹1,77,500 |
| Library & Information Assistant | Level 6 | ₹35,400 – ₹1,12,400 |
| Junior Translation Officer | Level 6 | ₹35,400 – ₹1,12,400 |
| Accountant | Level 5 | ₹29,200 – ₹92,300 |
| Stenographer | Level 4 | ₹25,500 – ₹81,100 |
தேர்வு செய்யப்படும் முறை
- கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
- நேர்காணல் (Interview)
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / PwBD: கட்டணம் இல்லை
- மற்றோர்: ₹500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhai.gov.in இல் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 30 அக்டோபர் 2025 (10.00 AM)
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 டிசம்பர் 2025 (06.00 PM)

