Fri. Aug 29th, 2025

கரூர் மாவட்டத்தில் நர்ஸ், லேல் டெக்னீஷியன் வேலை; 87 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்க விவரங்கள் / Nurse, Lail Technician Jobs in Karur District; 87 Vacancies – Apply Now Details

கரூர் மாவட்டத்தில் நர்ஸ், லேல் டெக்னீஷியன் வேலை; 87 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்க விவரங்கள் / Nurse, Lail Technician Jobs in Karur District; 87 Vacancies – Apply Now Details

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. சுகாதாரத்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 14 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்
செவிலியர்62ரூ.18,000
லேப் டெக்னீஷியன்5ரூ.13,000
MMU கிளீனர்1ரூ.8,500
மருத்துவமனை ஊழியர்4ரூ.8,500
உளவியலாளர்1ரூ.23,000
சமூக சேவகர்5ரூ.23,800
பாதுகாப்பாளர்2ரூ.8,500
ரேடியோகிராப்பர்5ரூ.13,300
பார்மசிஸ்ட்2ரூ.15,500
மொத்தம்87

வயது வரம்பு
நகர்புற ஆரம்ப சுகாதர நிலையத்தில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

  • செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • லேப் டெக்னீஷியன் பதவிக்கு MLT டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • கிளீனர் பதவிக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மெற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மருத்துவமனை ஊழியர் பதவிக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • உளவியலாளர் பதவிக்கு உளவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 6 மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக சேவகர் பதவிக்கு சமூகப்பணிக்கான முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும் மற்றும் 6 மாத பயிற்சியை பெற்றிருக்க வேண்டும்.
  • பாதுகாப்பாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம்.
  • ரேடியோகிராப்பர் பதவிக்கு ரேடியோ கண்டறிதல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ரேடியோகிராப்பர் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • பார்மசிஸ்ட் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை
கரூர் மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://karur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிட சான்று, சாதி சான்று, வேலைவாய்ப்பு பதிவு சான்று ஆகியவற்றை சேர்த்து இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் – 639 007.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்14.08.2025
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

கரூர் மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *