8வது படித்திருந்தால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையில் office assistant, driver jobs வேலைவாய்ப்பு – மாவட்ட வாரியாக
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் அலுவலக காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு |
1. பதவி: அலுவலக உதவியாளர்
அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. பதவி: அலுவலக காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
| மாவட்டம் | கடைசி தேதி |
| தஞ்சாவூர் | 17.11.2025 & 14.11.2025 |
| வேலூர் | 17.11.2025 |
| கடலூர் | 15.11.2025 |
| திருப்பூர் | 19.11.2025 |
| கோவை | 21.11.2025 & 26.11.2025 |
| செங்கல்பட்டு | 23.11.2025 |
| தென்காசி | 17.11.2025 |
| திருச்சி | 20.11.2025 |
| தூத்துக்குடி | 17.11.2025 |
| நாகர்கோவில் | 14.11.2025 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனிதாளில், தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வி தகுதி, சாதி, இருப்பிட முகவரி மற்றும் பணி அனுபவம் போன்ற சுயவிவரங்களை குறிப்பிட்டும் இருப்பிட சான்றிதழ் மற்றும் 2 அரசுகள் பதிவு பெற்ற அலுவலர்களிடம் இருந்து நாளது தேதியில் பெறப்பட்ட நன்னடத்தை சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்த விண்ணப்பங்கள் தனியே கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| தஞ்சாவூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 | Click here |
| தஞ்சாவூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 | Click here |
| வேலூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| கடலூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| திருப்பூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| கோவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 | Click here |
| கோவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 | Click here |
| செங்கல்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| தென்காசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| தூத்துக்குடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| நாகர்கோவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |

